×

குடந்தையில் 19ம் தேதி மாசிமக தீர்த்தவாரி மகாமக குளம் நீராழி மண்டபத்தில் சோலார் விளக்கு

கும்பகோணம்: கும்பகோணம் மகாமக குளத்தில் வரும் 19ம் தேதி மாசிமக தீர்த்தவாரி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயிலில் மாசிமக விழா கொடியேற்றம் கடந்த 10ம் தேதி நடந்தது. இதையடுத்து தினம்தோறும் காலை, மாலை நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று வெள்ளி பல்லக்கில் விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர் கோயிலில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் உள்ளிட்ட 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தனித்தனி படிச்சட்டங்களில் நாயன்மார்களின் உற்சவர்கள் இரட்டை வீதியுலாவாக ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரர் கோயில் வீதிகளில் உலா வந்தனர்.

நேற்று இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள், யானை அம்பாரியில் வீதியுலா நடந்தது. விழாவின் சிறப்பம்சமாக வரும் 19ம் தேதி மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி நடக்கிறது. இதில் பங்கேற்ற தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரகணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் குளத்தில் சுகாதார நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் 19 ந்தேதி மாசி மகம் விழா நடைபெறுவதை முன்னிட்டு இரவு நேரங்களில் குளத்தின் நடுவிலுள்ள நீராழி மண்டபத்தின் விளக்குகள் எரிய வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.  எனவே மாவட்ட நிர்வாகம்  பல லட்ச ரூபாய் செலவில் மீண்டும் சோலார் லைட்டுக்களை எரிய வைத்துள்ளனர். மகாமகுளத்தின் நடுவில் உள்ள நீராழி மண்டபம்  மின்னொளியில் ரம்மியமாக இருப்பதால்,   குளத்திற்கு வரும் பக்தர்கள், பொது மக்கள் நீராழி மண்டபத்தின் அழகை ரசித்து செல்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : water tank ,Masimagawa Tirthavari Mahamaga Pond , Meenamakka Thirthavari Mahamagai Pond
× RELATED கீழக்கரையில் ஆபத்தான குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை